Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து குறித்து வந்த அதிர்ச்சி தகவல்- ரசிகர்கள் ஷாக்

Information about the accident that happened to Ajith during the shooting of Valimai

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து ஹைதராபாத்தில் தான் நடந்து வருகிறது.

கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு அங்கு நடந்து வருகிறது. இப்பட சண்டை காட்சியின் போது அஜித்திற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது அவர் Ducati பைக்கை வேகமாக ஓட்டியிருக்கிறார், இறுதியில் வீலிங் செய்துள்ளார், அதாவது முன்பு இருக்கும் டயரை உயர தூக்குவது போல் காட்சி. அப்போது திடீரென அவர் கீழே விழ கொஞ்ச தூரம் பைக்குடன் இழுத்து சென்றுள்ளார்.

அதோடு சைலன்சரில் அவரது கை பகுதி பட்டுள்ளது. இதனால் அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

படக்குழு ஓய்வு எடுக்க கூறியும் தனது காட்சிகளை நடித்து முடித்த பிறகே அஜித் சென்னை திரும்பியுள்ளார்.