Review by : தமிழ்ஸ்டார்
சூர்யா, ஸ்ருதி ஹாசன், ஜானி
ஏ.ஆர். முருகதாஸ்
ஹாரிஸ் ஜெயராஜ்
உதயநிதி ஸ்டாலின்
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி சூர்யாவின் நடிப்பில் தீபாவளிக்கு மாபெரும் எதிபார்ப்புடன் வெளியாகவுள்ள படம்தான் ‘ஏழாம் அறிவு’.
இப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த அபிநயா நடிக்கிறார்.
விஞ்ஞானி, சர்க்கஸ் கலைஞர், புத்தபிக்கு என்று மூன்று வேடங்களில் சூர்யா நடித்து அசத்த இருக்கிறார். கஜினி படத்தில் வித்தியாசமான வில்லனை அறிமுகப்படுத்திய ஏ.ஆர். முருகதாஸ், இப்படத்தில் வியட்நாமிலிருந்து வில்லனை இறக்குமதி செய்திருக்கிறார்.
இவரது பெயர் ஜானி ட்ரி நுயன் (Johnny Tri Nguyen). கராத்தே, குங்பூ உள்ளிட்ட பலவிதமான தற்காப்புக் கலைகளை கற்றிருக்கிறார் ஜானி. ‘கிராடில் 2 தி கிரேவ்’ (Cradle 2 the Grave) என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். ஸ்பைடர் மேன் – 2 படத்தில் ஸ்பைடர்மேனுக்கு டூப் போட்டு நடித்தவர் என பல சிறப்புகளை உடையவர் ஜானி.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருப்பது மட்டுமின்றி, நமது முதுகுத் தண்டையே சில்லிட வைத்து விடுமாம். இப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியில், கதாநாயகன் சூர்யா வில்லன் நடிகர் ஜானி டிரை நுயென்னுடன் மோதுகிறார். இந்த சண்டைக் காட்சியை குங்பூ தற்காப்பு கலையை மையமாக்கி எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
எந்திரன் படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த நிறுவனத்தில்தான், இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளையும் வடிவமைத்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். எந்திரனை விட பலமடங்கு இப்படம் கிராபிக்ஸில் மிரட்ட இருக்கிறதாம்.
இப்படத்தில் இடம்பெறும் ரிங்கரிங்கா பாடலுக்கா 1000 நடனக்கலைஞர்கள் ஆடியிருக்கிறார்கள். இப்பாடல்தான் கதாநாயகனின் அறிமுகப்பாடலும் கூட பல வகையிலும் இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவை கவனித்துக் கொள்ள, ஆண்டனி படத்தொகுப்பு வேலையினை செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சுப்பர்ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பிரமாண்டம் படத்தின் ட்ரெய்லரிலும் அவ்வப்பொது வெளிவந்த போஸ்டர்களாக இருந்தாலும் சூர்யாவின் சுப்பர்ஹிட் படமான கஜினிக்கு பிறகு சூர்யா முருகதாஸ் இணையும் படம், உலக நயகன் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதி ஹாசனின் முதல் தமிழ் படம், மற்றும் இப்படம் எடுக்கப்பட்ட இடங்கள், போதி தர்மன் என்ற தமிழனா? என இப்படத்தின் ஒவ்வரு விடயமும் படத்தை எதிர்பார்க்க வைத்துள்ளது .
இது படத்தின் வெறும் முன்னோட்டம் தான் பொறுத்திருந்து பார்ப்போம் படம் எதிர்பார்பினை எந்த அளவுக்கு பூர்த்தி செய்துள்ளது என்று.
Post your comment
| Latest previews | |
| ▪ | மூன்று |
| ▪ | நண்பன் |
| ▪ | ஏழாம்அறிவு |
| ▪ | வேலாயுதம் |
| ▪ | ராஒன் |
| ▪ | எங்கேயும் எப்போதும் |
| ▪ | வந்தான் வென்றான் |
| ▪ | மதிகெட்டான் சாலை |
| ▪ | காசேதான் கடவுளடா |
| ▪ | அம்புலி |
![]() |
|




