Review by : தமிழ்ஸ்டார்
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா
ஜெயம் ராஜா
விஜய் ஆண்டனி
வேணு ரவிச்சந்திரன்
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை.
சரி கதையை சற்றே விரிவாக பார்ப்போம்...
பேனாவின் பலத்தால் எதையும் முறியட்த்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை கொண்ட பெண் பத்திரிகையாளர் ஜெனிலியா. கிராமத்தில் பால் வியாபாரம் செய்யும் இளைஞர் விஜய். கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் அமைதியாக வாழ்கிறார் விஜய். தங்கையின் திருமணம் நெருங்கி வர, கஷ்டப்பட்டு சிட்பண்டில் சேர்த்த சேமிப்பை எடுத்துச் செல்ல நகரத்துக்கு வருகிறார்.
விஜய் வந்த நேரத்தில் நகரத்தில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை. இந்நேரத்தில் பத்திரிகையாளர் ஜெனிலியா, குண்டு வைத்த சதிகாரனைக் தண்டிக்க 'வேலாயுதம்' வருவான் என்று துண்டு பிரசுரங்கள் அடித்து பரப்பி, டிவி செய்திகள் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்.
பால்கார விஜய் நகரத்தில் பிரபலமான கோயிலில் வந்து அர்ச்சனை செய்கிறார். அர்ச்சனை செய்ய பெயர் கேட்க, 'வேலாயுதம்' என்று கூறுகிறார் விஜய். வழிபாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான வேலாயுதம் இவன் தான் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்.
தங்கையின் திருமணத்துக்காக பணத்தை எடுக்கவந்த விஜய் பணத்தை எடுத்தாரா, ஜெனிலியா உருவாக்கிய 'வேலாயுதம்' கதாபாத்திரம் என்ன ஆனது என்பதை தான் காமெடி கலந்த கமர்ஷியல் காக்டெயிலாக கொடுத்து இருக்கிறார் ஜெயம் ராஜா.
இம்முறை 7ஆம் அறிவுடன் போட்டியாகவே வேலயுதம் படத்தை விஜய் பற்றும் சூர்யா ரசிகர்கள் கருதுகிறார்கள். இவர்கள் மட்டும் அல்ல மீடியாக்களும் அவ்வாறான எதிர்பார்ப்புடன் காத்திருக்க படம் வெளிவரும் முன்னமே திரைஅரங்க போட்டியில் இருபடமும் சிக்கியதுடன்வேலாயுதம் படத்தை திரையிடுவதற்கு பெரிய திரை அரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என விஜய் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியதும் நினைவிருக்கலாம். இதனால் இப்படத்தின் எதிர்பார்பு என்னும் அதிகரித்தது.
தீபாவளிக்கு வரும் இப்படம் என்ன செய்யப்போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்
Post your comment
| Latest previews | |
| ▪ | மூன்று |
| ▪ | நண்பன் |
| ▪ | ஏழாம்அறிவு |
| ▪ | வேலாயுதம் |
| ▪ | ராஒன் |
| ▪ | எங்கேயும் எப்போதும் |
| ▪ | வந்தான் வென்றான் |
| ▪ | மதிகெட்டான் சாலை |
| ▪ | காசேதான் கடவுளடா |
| ▪ | அம்புலி |
![]() |
|




