மதயானைக் கூட்டம் விமர்சனம்

Bookmark and Share


Review by : தமிழ் ஸ்டார்
Starring
கதிர், ஓவியா
Direction
விக்ரம் சுகுமாரன்
Music
எம்.ஆர்.ரகுநந்தன்

இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் அங்காளி பங்காளிச் சண்டையை மண் மணம் மாறாமல் சொல்ல வந்திருக்கும் படமே ‘மதயானைக் கூட்டம்’. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதே உண்மை.

செல்வாக்கு உடையவராக வாழ்ந்து வந்த ஜெயக்கொடி தேவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு அவர் செய்த துரோகத்தால் பிரிந்து தன் அண்ணன் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

மூத்த மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். முதல் மனைவியும், அவரது அண்ணனும் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினை ஒதுக்கி வைக்கிறார்கள்.

ஜெயக்கொடி தேவர் மாரடைப்பால் இறந்தவுடன் நடைபெறும் பிரச்சினையில் கொலை நிகழுகிறது. அப்பழி நாயகன் மீது விழ, பழிதீர்த்தே ஆக வேண்டும் என்று தாய் மாமன் கிளம்புகிறார். இறுதி இந்தக் கூட்டம் என்னவானது என்பது இந்த 'மதயானைக்கூட்டம்'.

ஜெயக்கொடி தேவர் இறுதிச் சடங்கில் ஆரம்பிக்கிறது படம். அப்போது நடைபெறும் கூத்துக் கலைஞர்களின் பாடல் மூலம் ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாரனை பாராட்டலாம்.

தேவர் சமூகத்தின் சாவு வீடு எப்படி இருக்கும், அவர்களது சம்பிரதாயங்கள் என்ன என்பதினை நம் கண்முன் அப்படியே காட்டியிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்கள் அனைத்திற்கும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்து, அவர்களைக் கையாண்டிருக்கும் யுக்திக்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

நாயகன் கதிர் புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய கதாபாத்திரத்தை வளைத்துக் கொடுத்து நடித்து கதையை வலுப்படுத்தியிருக்கிறார். நாயகி ஓவியா கதாநாயகி என்பதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றபடி, படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு வலுவில்லை.

தனது முதல் படத்திலேயே கிராமத்துக் கதை களத்தை விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அவ்வளவாக பேசப்படாவிட்டாலும் பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் மதயானைக்கூட்டம் வீரத்தில் அஞ்சாமல் பழி வாங்கும் கூட்டம்..!


Post your comment


Latest Gallery


About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions