Review by : தமிழ்ஸ்டார்
அதர்வா, அமலா பால், சந்தானம், நாசர்
எல்ரெட் குமார்
ஜீவி பிரகாஷ்
ஆர் எஸ் இன்ஃபோடெயின்மெண்ட்
எல்ரெட் குமார் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வா ,மைனா புகழ் அமலா பால் நடிதிருக்கும் த்ரிலர் அக்ஷன் படம்தன் முப்பொழுதும் உன்கற்பனைகள் படம் இப்படம் பெரும் எதிர் பார்ப்புடன் வெளியாகிய ஒரு படம் .
சரி கதைக்கு வருவம் ஒப்பனிங்லே ஒரு திரில்லர் கொலையுடன் தொடங்குகின்றது கதை.
சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது.
இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆருதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது. இந்த நிலையில் அமலா பால் அமெரிக்கா சென்று விடுகிறார்.
அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும் என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.
அமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார்? என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
அப்படி அவர் என்ன பார்த்தார்? அமலா பாலை காதலிக்கும் அதர்வா, அவரை தனது அலுவலகத்தில் பார்த்தும் கூட எந்தவிதமான உணர்வையும் ஏன் வெளிப்படுத்திகொள்ள வில்லை. அவர் எதற்காக கொலை செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதுதான் முப்பொழுதும் உன்கற்பனைகள்
பானா காத்தாடியில் லவ்வர் பாயாக வரும் அதர்வாவுக்கு இது 2வது படம். இவருடைய அழுத்தமான நடிப்பு கதைக்கு பக்க பலமாக தனக்கு கொடுக்கப்பட்ட கதபாத்திரத்தை சிறப்புடன் நடித்திருக்கிறார்.
அமலா பாலோட காஸ்டியூம்ஸ் நன்றாக உள்ளது கிளாமருக்கு முயற்சித்துவருகிறார். தேவதை போல வரும் சீனில் டிரஸிங் பிரமாதம்.
படத்தில் சந்தானம் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. சில டங்களில் தியோட்டர்கள் சிரிப்பில் அதிர்கின்றது.
படத்திற்கு தாமரையின் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷின் இசை அற்புதம். ‘ஒரு முறை...’ எனத் தொடங்கும் பாடல் நம்மை ரசிக்க செய்கிறது.
சண்டைக்காட்சிகள் வடிவமைத்த விதம், திரைக்கதை, பாடல் காட்சிகள் என இயக்குனர் எல்ரேட் குமார் கைத்தட்டலை வாங்குகிறார். இருந்தும் சன்டைக்காட்சிகளில் அன்னியன் படத்தையும் 7ஆம் அறிவு படத்தையும் நினைவு படுத்துகின்றது .
படத்தின் சில இடங்களில் லாஜீக் மீறல்கள் ரொம்ப அதிகம். காதலில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே பார்க்கும் படி சில காட்சிகளை அமைத்திருப்பது. அதர்வாவை சைக்கோ தனமாக காதல் செய்ய வைத்திருப்பது கொஞ்சம் ஓவர் இறுதி வரை காதல் உணர்வு வரவில்லை.
பொதுவாக படத்தை ஒரு முறை சென்று பார்க்கலாம். கல்லூரி மாணவர்கள், காதலர்களுக்கு ஏற்ற படம்.
சைக்கோ காதல்
![]()
Post your comment
| Latest reviews | |
| ▪ | கலகலப்பு |
| ▪ | வழக்கு எண் பதின் எட்டின் கீழ் ஒன்பது |
| ▪ | ஒருகல் ஒரு கண்ணாடி |
| ▪ | மூன்று |
| ▪ | அரவான் |
| ▪ | முப்பொழுதும் உன் கற்பனைகள் |
| ▪ | காதலில் சொதப்புவது எப்படி |
| ▪ | தோனி |
| ▪ | மெரினா |
| ▪ | வேட்டை |
![]() |
|




