800 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் ரஜினிமுருகன்!

Bookmark and Share

800 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் ரஜினிமுருகன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் நாளை மறுநாள் ஜனவரி 14-ம் தேதியன்று உலகமெங்கும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்துக்கான முன்பதிவு தற்போது இணையத்தளம் மற்றும் திரையரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

அதற்கேற்ப சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் புரோமோ வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions