இரண்டு ரயில்களில் 10 எண்றதுக்குள்ள கிளைமாக்ஸ்

Bookmark and Share

இரண்டு ரயில்களில் 10 எண்றதுக்குள்ள கிளைமாக்ஸ்

ரயில்வே அனுமதிக்காக, விக்ரம் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படக்குழு காத்திருக்கிறது.‘கோலிசோடா’ படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் படம், ‘10 எண்றதுக்குள்ள’. விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராஃப், மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர்.

பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார் படம் பற்றி விஜய் மில்டன் கூறியதாவது: படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்து விட்டது. முதல் பகுதி ரீ-ரெக்கார்டிங்கை இசையமைப்பாளர் இமான் ஆரம்பித்து விட்டார்.

இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி. இரண்டு ரயில்களை வைத்து அதைப் படமாக்க வேண்டும். ரயில்வே அனுமதிக்கு காத்திருக்கிறோம். கிடைத்த பிறகு ரயில்களில் அந்த சண்டைக் காட்சியைப் படமாக்க இருக்கிறோம்.

சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் அந்தக் காட்சியை அமைக்க இருக்கிறார். இந்தக் காட்சியுடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions