புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்

Bookmark and Share

புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்

விஜய்யை வைத்து ‘ப்ரியமுடன்’, ‘யூத்’ படங்களை இயக்கியவர் வின்செண்ட் செல்வா. இவர் இப்படத்தை தவிர, ஜித்தன், பெருமாள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ‘பத்து செகண்ட் முத்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களை தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்த தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். இந்த கோணங்களை இயக்குனர் வின்செண்ட் செல்வா விளக்குகிறார். அவர் கூறும்போது, "சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்வது தான்.

அந்த தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.

இயக்குனர் வின்செண்ட் செல்வா ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்.

அதை பற்றி கூறும்போது, "இந்த கதையை எழுதி முடித்தவுடனே புதுமுகங்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களாக நடிக்க வைத்தேன். பெண் சாதிக்க நினைத்த விஷயம் வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றி பேசுகிறது. படம் அதிவேகமாக இருக்கும், படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை மட்டுமே உள்ளது.

புது முகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க, மிஸ்டர் இந்தியா ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை, வசனம் ரூபன் எழுத, சான் லோகேஷ் எடிட்டிங்கில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில் படம் உருவாகியிருக்கிறது. 

வாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லக்‌ஷ்மி டாக்கீஸ் தயாரித்திருக்கிறது.


Post your comment





Related News
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
ரூ 100 கோடி பட்ஜெட்டில் தல அஜித்- அதிர்ந்த கோலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions