4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்

Bookmark and Share

4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்

2.0 படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் கடந்த 29ம் தேதி வெளியானது. படம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்தது.

இந்நிலையில் 2.0 வசூலில் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

2.0 படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தததால் படத்தின் வசூல் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது. அதனால் எதிர்பார்த்தபடியே அமோகமாக வசூல் ஆகியுள்ளது. 2.0 படம் இந்தியில் மட்டும் நான்கு நாட்களில் ரூ. 97. 25 கோடி வசூலித்துள்ளது.

2.0 படத்தை பார்ப்பவர்களால் அதன் பிரமாண்டத்தையும், தொழில்நுட்பத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஷங்கர், ரஜினியை பிடிக்காதவர்களால் கூட படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

அப்படி இருந்தும் 2.0 பொம்மை படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் நெகட்டிவை விட படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் அதிகம் கிடைத்துள்ளது பலமாக அமைந்துள்ளது. 

அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற சாதனை படைத்துள்ளது 2.0. ரங்கஸ்தலம் படத்தின் வசூல் சாதனையை நான்கே நாட்களில் முறியடித்துள்ளது 2.0 என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு
10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions