24 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது

Bookmark and Share

24 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது

சூர்யாவுடன் 'அஞ்சான்' படத்தில் இணைந்து நடித்தார் சமந்தா. அந்தப் படம் படு தோல்வியடைந்து சூர்யா மற்றும் லிங்குசாமி இருவருக்கும் கடும் பின்னடைவைத் தேடிக்கொடுத்தது.

அப்படி இருந்தும், அஞ்சான் தோல்வி சென்ட்டிமெண்ட்டைப் பற்றி அஞ்சாமல் 24 படத்தில் சமந்தாவை மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக்கிஉள்ளனர். '24' படத்தை  'யாவரும் நலம்' மற்றும் மனம் தெலுங்குப் படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்குகிறார்.

சயன்டிஃபிக் த்ரில்லர் படமாக உருவாகி வரும் '24' படத்தை சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மும்பையில் துவங்கியது. 24 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் சூர்யாவுடன் சமந்தாவும் கலந்துக் கொண்டார்!  முதல் ஷெட்யூலில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதைத் தொடர்ந்து சமந்தா மும்பையிலிருந்து சென்னை திரும்பியுள்ளார்.  

24 படத்தில் கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், அந்த வேலைகளை ஹாலிவுட்டிற்கு சென்று செய்யலாம் என சூர்யா யோசனை சொல்லி இருக்கிறார்.

சூர்யா நடித்துள்ள 'மாஸ்' படம் மே-15 ஆம் தேதி ரிலீசாகவிருப்பதால்  அதற்கு முன்னதாக '24' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.  24 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions