24 பர்ஸ்ட் லுக்கில் கூறும் ரகசியங்கள்!

Bookmark and Share

24 பர்ஸ்ட் லுக்கில் கூறும் ரகசியங்கள்!

சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் இன்று 24 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது. இந்த போஸ்டர்கள் ஹாலிவுட் பட பாணியில் இருந்தது.இதில் சூர்யாவிற்கு பின் நிறைய இயற்பியல் சார்ந்த கணித கோட்பாடுகள் தெரிகின்றது. 

இதை வைத்து பார்க்கையில் சூர்யா இயற்பியல் சார்ந்த துறையில் வேலைப்பார்ப்பவராக இருக்கலாம், அல்லது பெரிய விஞ்ஞானியாக கூட இருக்கலாம் என கூறிவருகின்றனர்.மேலும், மற்றொரு போஸ்டரில் கடந்த நூற்றாண்டில் இருக்கும் மேல் வர்க்கத்தினர் ஆடைகளை அணிந்துள்ளார்.

அதை வைத்து பார்க்கையில் சூர்யா தான் கண்டுப்பிடித்த டைம் மிஷின் மூலம் முந்தைய நூற்றாண்டுக்கு செல்ல, அங்கு இருக்கும் சூர்யாவை சந்திப்பது தான் கதை என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions