2.0 படத்திற்கு சம்பளமே கொடுக்கவில்லையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

2.0 படத்திற்கு சம்பளமே கொடுக்கவில்லையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

ரஜினிகாந்த், ஷங்கர் என பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் இசை வெளியீட்டு விழா துபாயில் நடக்கவுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் ரூ 12 கோடி வரை செலவு செய்துள்ளனர், ஆனால், இப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் முரளி மனோகருக்கு சம்பளமே தரவில்லையாம். அவர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாமல் பேஸ்புக்கில் ஒரு சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில் ‘இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. #2.0க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன்.

"கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி" - "என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்" என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப் படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?
2.0 ஷூட்டிங் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட எமி
2.0 படத்தின் டீசர் தேதி வெளிவந்தது, இதோ
2.O ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதோ!
2.O படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions