தமிழ் படங்கள் தலைப்புக்கு இனி ஏது பஞ்சம்!

Bookmark and Share

 தமிழ் படங்கள் தலைப்புக்கு இனி ஏது பஞ்சம்!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக, ஒரே தலைப்புக்காக பெரிய பட்ஜெட் படங்களும் சிறு முதலீட்டு படங்களும் மோதிக் கொள்கின்றன. சில பிரச்னைகள் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.

இந்நிலையில் தலைப்பு தட்டுப்பாடு காரணமாக, படங்களுக்கு எண்களில் தலைப்பு வைக்கும் சீசன் தொடங்கியிருக்கிறது. ஜெயேந்திரா இயக்கிய படத்துக்கு '180' என்று பெயர் வைக்கப்பட்டது.

அடுத்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய படத்துக்கு '3' என்று பெயர் வைக்கப்பட்டது. ஒரு இளைஞனின் மூன்று முக்கிய பருவங்களை பற்றிய கதை என்பதால் இந்த தலைப்பு என்று ஐஸ்வர்யா விளக்கம் தந்தார்.

புதுமுக இயக்குனர் பகவதி பாலா இயக்கும் படத்துக்கு '4' என்று பெயர் வைத்துள்ளார். ஒரு பள்ளியில் பிளஸ்2 படிக்கும் 4 மாணவர்கள் பற்றிய கதையாம். நிதின் சத்யா நடிக்கும் படத்துக்கு '1 4 3' என்று பெயரிட்டுள்ளனர்.

ஷாம் நடிக்க, வி.இசட் துரை இயக்கும் படத்துக்கு '6' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கதை 6 மாதம், 6 நாள், 6 மணி நேரம், 6 நிமிடங்கள், 6 விநாடிகளில் நடப்பதாலும், 6 மாநிலங்கள் கதை களமாக இருப்பதாலும் இந்த தலைப்பு வைப்பதாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். '7' என்ற பெயரிலும் படம் தயாராகி வருகிறது.

 பரத் நடிக்க, சசி இயக்கும் படத்தின் பெயர் '555'. இதில் பரத் புதுவகையான கெட்அப்பில் நடித்து வருகிறார். புதுமுகம் ஆதவன், ஆகன்ஷா நடிக்கும் படத்துக்கு '250' என்று தலைப்பு வைத்துள்ளனர். '9' என்ற தலைப்பிலும் '111' என்ற தலைப்பிலும் படங்கள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இவை தவிர, 'பத்தாயிரம் கோடி', 'எதிரி எண் 3', 'அத்தியாயம் 6', 'தோற்றம் 2012' என்ற எண்களிலும் படங்கள் தயாராகி வருகின்றன. 'இனி தமிழ் சினிமாவுக்கு தலைப்பு பஞ்சம் வராது. கோடிக் கணக்கில் நம்பர் இருக்கிறதே' என்றார் முன்னணி இயக்குனர் ஒருவர்.

இருந்தும் படங்களின் தலைப்பு  தமிழில் இல்லாமல் நம்பரில் இருப்பாதால் இப்படிப்பட்ட தலைப்புகளுக்கு எப்போது தடைவிதிக்கப்படும். (ஆப்பு கண்ணுக்கு தெரியாது)


Post your comment





Related News
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
தாதா இயக்குனருடன் இணையும் ஆரவ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions