36 வயதினிலே போன்ற முயற்சி தொடரும் - சூர்யா!

Bookmark and Share

36 வயதினிலே போன்ற முயற்சி தொடரும் - சூர்யா!

தன் காதல் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. தனது 2டி நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக '36 வயதினிலே' படத்தை தயாரித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான ’ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீ-மேக்கான இப்படம், கடந்த வௌ்ளிக்கிழமை ரிலீஸானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு கிடைத்த ரீ-என்ட்ரி சிறப்பாக அமைந்திருப்பதால் ஜோதிகா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். ஜோதிகா மட்டுமல்லாது இப்படத்தை தயாரித்த சூர்யாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

36 வயதினிலே படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என்னை நெகிழ செய்கிறது.  இனி தொடர்ந்து இது போன்ற நல்ல நல்ல படங்களை என்னுடைய 2டி நிறுவனம் கொடுக்கும். ரசிகர்கள், மீடியாக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று சூர்யா கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions