ராசாத்தியால் புகழ்பெற்ற பள்ளி ஆசிரியை

Bookmark and Share

ராசாத்தியால் புகழ்பெற்ற பள்ளி ஆசிரியை

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நடுத்தர பெண்களின் தேசிய கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது 36 வயதினிலே படத்தில் இடம் பெற்றிருக்கும் "வாடி ராசாத்தி..." பாடல்.

படத்தின் புரமோசனுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பாடல் செம ஹிட்டாக... பின்னர் அதைப் பாடிய லலிதா விஜய குமாரையும் இன்னும் சில மூதாட்டிகளையும் பாட வைத்து அதை படம்பிடித்து படத்தின் டைட்டில் சாங்காக சேர்க்கப்பட்டது.

இந்தப் பாடலை பாடியிருப்பவர் சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இசை ஆசிரியை லலிதா விஜயகுமார். இசை பிறந்த பூமியான திருவையாறுதான் அவருக்கு சொந்த ஊர்.

முறைப்படி இசை கற்றுக் கொண்ட லலிதா அரசு பள்ளியில் இசை ஆசிரியையாக பணிக்குச் சேர்ந்தர். இவரது பாரம்பரியமிக்க இசைக் குடும்பம் சினிமாவுக்கு எதிராக இருந்ததால் லலிதா சினிமா பக்கம் வராமல் தன் மாணவர்களுக்கு இசை கற்றுத் தருவதோடு திருமண விழாக்களில் பாடி வந்தார்.

அதன் பிறகு சென்னைக்கு வந்ததும் ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் பணிக்கு சேர்ந்தார்.லலிதாவின் மகன் பிரதீப்குமார் இப்போது சினிமா பின்னணி பாடகராகியிருக்கிறார்.

பிரதீப்குமாரும், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் நண்பர்கள். அந்த வகையில் பிரதீப்குமார் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் சந்தோஷ் நாராயணன் லலிதாவின் அற்புதமாக குரலை கேட்டிருக்கிறார்.

எப்படியாவது இந்த குரலை தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டார். அதற்கான வாய்ப்பு 36 வயதினிலே படத்தில் அமைந்ததும். சும்மா புரமோ சாங்தான் என்று சம்மதிக்க வைத்து இன்று நாடறிந்த பாடகியாக்கி விட்டார்.

இப்போது லலிதா எங்கே சென்றாலும் வாடி ராசாத்தியை பாடச் சொல்லி கேட்கிறார்கள். இந்த ஒரு பாடலை பாடுவதற்காக மட்டும் கச்சேரி வாய்ப்புகள் குவிகிறது.

அடுத்தடுத்து படங்களிலும் பாட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் பள்ளிக்கு சென்று இசை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் லலிதா விஜயகுமார்.


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions