8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகாவின் ரீ-என்ட்ரி!

Bookmark and Share

8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகாவின் ரீ-என்ட்ரி!

அஜித் நடித்து 1999ம் ஆண்டு 'வாலி' படத்தில் 'சோனா' என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அஜித்தை மட்டுமல்லாது ரசிகர்களையும் 'சோனா...ஓ சோனா...ஐ லவ் யூ..லவ் யூடா...' என அடுத்த சில வருடங்களுக்கு பாட வைத்தவர் ஜோதிகா.

மும்பையில் இருந்து வந்திருந்தாலும், தமிழ் தெரியாத அந்த காலகட்டங்களிலேயே அவர் கொடுத்த முகபாவங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியவை. 100 ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் லட்ச ரூபாய்க்கு கூட நடிச்சிக் கொடுப்பாரு ஜோதிகா என அப்போதே கிண்டலாகச் சொல்வார்கள்.

அந்த அளவிற்கு நடிப்பில் புலியாகவே இருந்தார். தொடர்ந்து “முகவரி, குஷி, ரிதம், தெனாலி, டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், 12பி, தூள், காக்க காக்க, திருமலை, பேரழகன், மன்மதன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல், மொழி” என ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.

“பூவெல்லாம் கேட்டுப் பார், காக்க காக்க, உயிரிலே கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல்” ஆகிய படங்களில் தன்னுடன் ஜோடியாக நடித்த சூர்யாவைக் காதலித்து அவரை 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நடிப்பதையும் விட்டுவிட்டார். தமிழில் ஜோதிகா நடித்து கடைசியாக 2007ம் ஆண்டு 'மொழி' படம் வெளிவந்தது.

அதன் பின் எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்கவேயில்லை. நடுவில் அவர் நடிப்பதாக வந்த செய்திகள் எல்லாம் வதந்திகளாகவே முடிவு பெற்றன. மீண்டும் ஒரு நல்ல கதைக்காகவும், நல்ல கதாபாத்திரத்திற்காகவும் காத்திருந்த ஜோதிகாவுக்கு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஹௌ ஓல்ட் ஆர் யூ' படம் கிடைத்தது.

அந்தப் படத்தை ரீமேக் செய்து '36 வயதினிலே' என நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் வழக்கம் போலவே தன்னுடைய நடிப்பால் மிரட்டியுள்ளார் ஜோதிகா.

திருமணத்திற்குப் பின் தமிழில் நடிக்க வரும் நடிகைகளுக்கு அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள்தான் அதிகம் கிடைக்கும். ஆனால், தனி ஹீரோயினாக இந்தப் படத்தில் நடித்து ஜோதிகா நடித்து சாதித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

திருமணம் ஆன பின்னும் ஒரு நடிகையால் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பதை ஜோதிகா இந்தப் படம் மூலம் புரிய வைத்து தொடர்ந்து தமிழில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

திருமணம் நடிப்புக்கு ஒரு தடையல்ல என்பதை புதிய வெளிச்சத்துடன் ஜோதிகா ரசிகர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் புரிய வைக்க நமது வாழ்த்துகள்...


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions