ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!

Bookmark and Share

ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!

தான் மதிக்கும் இருபடங்களாக மொழி மற்றும் 36 வயதினிலே படங்களைக் கூறி வருகிறார் ஜோதிகா. மொழி படத்தின் மீது ஜோதிகாவுக்கு தனி மரியாதை. அதன் படக்குழுவினர் மீதும் தனிமதிப்பு வைத்திருக்கிறார். அதன் அடையாளமாக, வெளிப்பாடாக மொழி இயக்குநர் ராதாமோகன் இயக்கியுள்ள உப்பு கருவாடு டீஸரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். வெளி நிகழ்ச்சிகளுக்கு வராத ஜோதிகா இயக்குநர்  ராதாமோகன் மீது கொண்ட மதிப்பில் இதனைச் செய்துள்ளார். 

36 வயதினிலே படம் ஜோதிகாவுக்குள் நிறைய மன மாற்றங்களையும் நம்பிக்கையையும் ஊட்டி இருக்கிறது. 36 வயதினிலே படம் பார்த்து தங்கள் வாழ்க்கை அனுபவங்களை எழுதும் பெண்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறாராம். அந்தப்படம் மாற்றிய விதத்தை தாங்கள் மாறிய விதத்தைப்பற்றி  எழுதப்படும்  கடிதங்களை தன்னிடம் காட்டுமாறு சூர்யாவிடம் கூறியிருக்கிறாராம். 

ஜோதிகா காட்டிய ஆர்வத்தில்தான் அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவுவதோடு விட்டு விடாமல் பெண்களுக்கும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கும் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறவர்களை எல்லாம் கண்டறிந்து உதவுகிற திட்டத்தையும் கொண்டு வந்து இருக்கிறதாம். இதன் முதல் முயற்சியாக 25 பேர் தேர்வு செய்து உதவி செய்ததை வெகுவாக ஜோதிகா ரசித்தாராம்.

திறமைசாலி பெண்மணிகள் பற்றி அறிந்து வியந்து போகிறாராம். இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு உதவிட இந்தத் திட்டத்தை மேலும் விரிவு படுத்தவேண்டும் என்று தன் கணவர் சூர்யாவிடம் கூறியுள்ளாராம்.


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions