தெலுங்குக்குப் போகும் '36 வயதினிலே'

Bookmark and Share

தெலுங்குக்குப் போகும் '36 வயதினிலே'

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதைத் தொடராமல் குடும்பம், குழந்தைகள் என இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த ஜோதிகா, எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த படம் '36 வயதினிலே'.

மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஹௌ ஓல்ட் ஆர் யு' படத்தை ரீமேக் செய்து இங்கும் வெற்றி பெற்றார்கள். இதுவரை படம் சுமார் 8 கோடி வரை வசூலித்துள்ளதாகவும், மொத்தமாக 18 கோடி ரூபாய் வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களே அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்தப் படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட முடிவெடுத்துள்ளார்களாம். ஜோதிகா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்தான்.

சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். அவருக்கென அங்கும் ரசிகர்கள் உண்டு. அதனால், '36 வயதினிலே' படத்தை டப்பிங் செய்து வெளியிடலாம் என சூர்யா முடிவெடுத்துள்ளாராம்.

அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளையும் ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. இன்னும் சில வாரங்களில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions