தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?

Bookmark and Share

தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?

தமிழ்த் திரையுலகில் கடந்த சில மாதங்களில் வெளிவந்த படங்களின் வெற்றியைப் பற்றிப் பார்க்கும் போது ஏதும் டிரென்ட் மாறுகிறதோ என்றுதான் யோசிக்க வைக்கிறது. பாபநாசம், காக்கா முட்டை, டிமான்டி காலனி, 36 வயதினிலே ஆகிய படங்களின் வெற்றியை வைத்துப் பார்க்கும் போது அது உண்மைதான் என்று புரியவைக்கும்.

மேற் சொன்ன நான்கு படங்களும் பிரம்மாண்டமான தயாரிப்போ அல்லது அசர வைக்கும் அரங்கங்களோ இல்லாமல் ஒரு சாதாரண படமாகவே காட்சியளித்தன. எளிமையான கதை, சொன்ன விதம் ஆகியவை இந்தப் படங்களுக்கு நல்லதொரு வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

அதே சமயத்தில் பிரம்மாண்டமான படைப்பு என்று விளம்பரப்படுத்தப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட எலி, மாஸ், உத்தம வில்லன், ஆகிய படங்களை ரசிகர்கள் ஏற்காததற்கான காரணத்தையும் பார்க்க வேண்டும். இந்தப் படங்களில் ரசிகர்களை வசீகரிக்க வைக்கம் விதத்தில் கதையோ, காட்சிகளே இடம் பெறவில்லை என்பதே உண்மை.

அதன் காரணமாகவே இந்தப் படங்கள் தோல்வியடைந்துள்ளன. வடிவேலு, சூர்யா, கமல்ஹாசன் என மூன்று பெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கதை என்ற ஒன்று சரியாக இல்லையென்றால் அந்தப் படங்கள் சரிந்து விடும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணத்தைச் சொல்ல முடியாது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தமிழ்த் திரையுலத்தில் பிரம்மாண்டம் என்பது எடுபடாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது.


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!
டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions