36 வயதினிலே படத்துக்கு யு சான்றிதழ்

Bookmark and Share

36 வயதினிலே படத்துக்கு யு சான்றிதழ்

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் '36 வயதினிலே'.  சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படம் மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் ரீமேக்.

மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் தமிழில் ஜோதிகா நடிக்க  'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தை  '36 வயதினிலே'வாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ரோஸன் ஆன்ட்ரூஸ்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகி உள்ள இப்படம் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் உருவான பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக லலிதா என்ற பாட்டு டீச்சர் பாடிய வாடி ராசாத்தி பாடல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 36 வயதினிலே படத்தை நேற்று தணிக்கைக்குழுவினர் பார்த்தனர்.

படத்திற்கு சென்சாரில் ஒரு 'கட்' கூட இல்லை. க்ளீன் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் வெற்றியடைந்தால் தமிழில் கதாநாயகிப் படங்கள் அணிவகுக்க ஆரம்பித்துவிடும்.

 


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions