ஏப்ரல் 6 அன்று வெளியாகிறது 36 வயதினிலே இசை

Bookmark and Share

ஏப்ரல் 6 அன்று வெளியாகிறது 36 வயதினிலே இசை

ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீ-மேக்கான 36 வயதினிலே படத்தில் நீண்டஇடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ளார்.

36 வயதினிலே படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.  இதை சூர்யா தரப்பினரும் உறுதி செய்திருந்தனர். பின்னர் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின்  ராசாத்தி என்ற பாடலை மட்டும்.. வீடியோ வடிவில் வெளியிடுவது என்றும், சில நாட்கள் கழித்து அதாவது  ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் மொத்த பாடல்களையும் வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர்.!

 கொம்பன் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 36 வயதினிலே படத்தின் மொத்த திட்டமும் முடங்கிப்போனது. சிங்கிள் ட்ராக்கும் வெளியிடப்படவில்லை. ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனும் நடக்கவில்லை.

கொம்பன் பிரச்சனைகள் ஓய்ந்து படமும் ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே 36 வயதினிலே படத்தின் இசைவெளியீட்டை ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்த உள்ளனர். சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் 36 வயதினிலே இசைவெளியீடு நடைபெற உள்ளது.


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions