ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’

Bookmark and Share

ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’

பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிக்க 1977ம் ஆண்டு வெளிவந்த ’16 வயதினிலே’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு சாதனைப் படமாக அமைந்தது.

அதன் பின் அந்த படத் தலைப்பின் சாயலில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. ஒரு காலகட்டத்தில் ஒரு படத்திற்கு வைக்கும் தலைப்பு வெற்றி பெற்றால், அதே போல பல தலைப்புகளை வைத்துப் படங்களை வெளியிடுவது வழக்கம். ’காதல்’ என்று ஆரம்பமான தலைப்பு வைத்து ’காதல் கோட்டை’ படம் வெளிவந்ததும் அதே போல பல ’காதல்’ தலைப்புப் படங்கள் வந்தன.

ஆனால், ’16 வயதினிலே’ என்று அதன் பின் எந்த ஒரு வயதையும் குறிக்கும் வகையில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேலும் ஒரு 20 வருடங்கள் சேர்த்து ’36 வயதினிலே’ என்று ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ள படத்திற்கு பொருத்தமான தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ’ஹௌ ஓல்ட் ஆர் யு’ படத்தின் ரீமேக்கான  இந்தப் படம் மூலம் திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். படத்திற்குத் தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்கள்.

நேற்று சூர்யா அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் இந்தப் படத்தின் தலைப்பையும், முதல் பார்வையையும் வெளியிட்டார். 10 வயது முதல் 60 வயது வரை உள்ள சில பெண்கள் திரும்பி நின்று கொண்டிருக்க, ஜோதிகா மட்டும் முன் பக்கம் பார்த்து நின்று கொண்டிருக்கும்படியான ’36 வயதினிலே’ படத்தின் முதல் பார்வையே பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. இந்தப் படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions