ஹவ் ஓல்ட் ஆர் யூ... தமிழில் ‘36 வயதினிலே’ எனப் பதில் சொல்கிறார் ஜோ?

Bookmark and Share

ஹவ் ஓல்ட் ஆர் யூ... தமிழில் ‘36 வயதினிலே’ எனப் பதில் சொல்கிறார் ஜோ?

நீண்ட இடைவேளைக்குப் பின் ஜோதிகா நடித்துள்ள படத்திற்கு ‘36 வயதினிலே' என பெயரிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஷி, சந்திரமுகி, மொழி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஜோதிகா.

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்த நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா, விளம்பரங்களில் மட்டும் தலை காட்டி வருகிறார். இந்நிலையில், ஜோதிகாவைப் போலவே திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்ட மலையாள நடிகை மஞ்சு வாரியார், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் மூலம் மலையாளத்தில் மறுபிரவேசம் செய்தார். எதிர்பார்த்ததைப் போலவே அப்படம் அவருக்கு பாராட்டுக்களை வாங்கிக் கொடுத்து, வெற்றிப்படமாக அமைந்தது.

ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகிறது.

ஆனபோதும், இதுவரை இப்படத்திற்கு தலைப்பு அறிவிக்கப் படவில்லை.பாரதிராஜா இயக்கி, ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த வெற்றிப்படமான 16 வயதினிலே என்ற தலைப்பை மாற்றி, 36 வயதினிலே என இப்படத்திற்கு வைக்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 வயதினிலே என்ற தலைப்பு அனைவருக்கும் பிடித்து விட்டதால் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions