'36 வயதினிலே' படத்திலிருந்து முதலில் வருகிறது ராசாத்தி

Bookmark and Share

'36 வயதினிலே' படத்திலிருந்து முதலில் வருகிறது ராசாத்தி

நீண்டஇடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் '36 வயதினிலே'.  இப்படம் மலையாள 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் ரீ-மேக் என்பதும், இப்படத்தை மலையாள இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியிருக்கிறார் என்பதும் தெரிந்த விஷயம்.  

'36 வயதினிலே' படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது.  இதை சூர்யா தரப்பினரும் உறுதி செய்திருந்தனர். இந்நிலையில் அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று இப்படத்தின் ஒரு பாடலை மட்டும் வீடியோ வடிவில் வெளியிடுகிறார்கள்.  ஜோதிகாவுக்கு பில்ட்அப் கொடுப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள 'ராசாத்தி'  என்ற பாடல்தான் முதலில் வெளியிடப்பட உள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள  ராசாத்தி பாடலின் வெளியீட்டை அடுத்து சில நாட்கள் கழித்து அதாவது  ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் மொத்த பாடல்களையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்!  

இப்படத்தை சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளதால்  சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்களிடையேயும் 36 வயதினிலே படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் மே மாதம் ரிலீசாகிறது.


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions