மே மாதம் 36 வயதினிலே ரிலீஸ்!

Bookmark and Share

மே மாதம் 36 வயதினிலே ரிலீஸ்!

மஞ்சுவாரியார் நடித்து மலையாளத்தில் ஹிட் அடித்த ஹவ் ஓல்டு ஆர்யூ என்ற படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ரீமேக் செய்கிறார். மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் இயக்குகிறார்.

மஞ்சு வாரியார் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடித்துள்ளார். அவருடன் ரகுமான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மலையாள படத்தின் தலைப்பு உனக்கு வயது என்ன? என்று கேட்டது. தமிழ் படம் 36 என்று பதில் சொல்லியிருக்கிறது.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஆர்.திவாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜி வசனத்தையும், விவேக் பாடல்களையும் எழுதி உள்ளனர். சூர்யாவுடன், ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டின் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

பாடல்களை திங் மியூசிக் வாங்கி உள்ளது. ஏப்ரலில் பாடல்களும், மே மாதம் படமும் வெளியிடப்படுகிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

மனைவியின் ரீ எண்ட்ரி படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் சூர்யா கவனமாக இருக்கிறார். பிரமாண்ட அளவில் விளம்பரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதோடு பாடல் வெளியீட்டு விழாவை தனது திரையுலக நண்பர்களை அழைத்து பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.


Post your comment





Related News
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!
சூர்யா 36 படத்தில் மெகா ஹிட் நாயகி - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
50 ஆவது நாளைக் கடந்து 36 வயதினிலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions