20/20 மேட்ச் மாதிரி விறுவிறுப்பான படம் ’9 டூ 10’

Bookmark and Share

20/20 மேட்ச் மாதிரி விறுவிறுப்பான படம் ’9 டூ 10’

நெடுஞ்சாலை பயணத்தை காதல் கலந்த திகிலுடன் வெளிப்படுத்தும் 9 டூ 10. இயக்குனர் பாக்யராஜிடமும், கே.எஸ்.ரவிக்குமாரிடமும் உதவியாளராக பணியாற்றியவர் விஜய் சண்முகவேல் அய்யனார். இவர் தற்போது இயக்கியிருக்கும் படம் ‘9 டூ 10’.

இதில் கதிர் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே காந்தர்வன் படத்தில் ஹீரோவாக நடித்தவர். இவருக்கு ஜோடியாக ஸ்வப்னா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். ராஜ ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாயகன் கதிர், ஒளிப்பதிவாளர் ராஜ ரத்தினம், இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவர்கள் இப்படத்தை பற்றி கூறும்போது,

இப்படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகியிருக்கிறது. இதில் கதிர் டாக்ஸி டிரைவராகவும் நாயகி ஸ்வப்னா பயணியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நெடுஞ்சாலையில் இப்படம் கதை நகர்கிறது.

நாயகி சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கும், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கும் இடையேயான டிராவல்தான் கதை. முதல் பாதி பயணத்திலேயே இருக்கும். பிற்பாதியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பங்கள் இருக்கும். இறுதியில் காதலோடு இப்படத்தை முடித்திருக்கிறோம்.

இப்படம் தற்போது நடைபெறும் 20/20 மேட்ச் மாதிரி விறுவிறுப்பாக செல்லும். இப்படத்தில் நாயகிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. அதை உணர்ந்து நாயகி சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது.

வசனங்கள் அனைத்தும் பாக்யராஜ் பாணியில் இருக்கும். நெடுஞ்சாலையில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரே கட்டமாக தொடர்ந்து 3 மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளோம், என்றார்கள். 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions