96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘96’. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தை அக்டோபர் 4ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடித்திருக்கிறார்.

சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். கோவிந்த் மேனன் இசையில் சமீபத்தில் வெளியாகிய `காதலே காதலே' பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions