ரகுமான் பெயரில் தெரு : கனடா கவுரவம்

Bookmark and Share

ரகுமான் பெயரில் தெரு : கனடா கவுரவம்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை சேவையை கவுரவிக்கும் வண்ணம், கனடா அரசு, ஆன்டரியோ நகரத்தில் உள்ள தெருவிற்கு, ரகுமானின் பெயரை வைத்துள்ளது. தமிழ், ஹிந்தி என இந்திய மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் மற்றும் ஈரானிய படங்களிலும் சிறப்பான இசையை தந்து. இசை உலகத்தையே தன்வசமாக்கியுள்ளார். அவரது இசையமைப்பில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக, ரகுமான், 2 ஆஸ்கார் விருதுகளை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், கனடா நாட்டில் சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, கனடா சென்றிருந்த ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய பெயரிலான தெருவில் நின்றபடி "Welcome to my street! (In Markham, ON, Canada)" எடுத்த போட்டோவை, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் இதுவரை, சர்வதேச அளவில் 2 அகாடமி விருதுகள், 2 கிராமி விருதுகள், பாஃப்டா விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய அளவில், 4 தேசிய விருதுகள், 15 பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் தென்னிந்திய அளவில் 13 பிலிம்ஃபேர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions