விரக்தி அடைந்த வெங்கடேஷ்!

Bookmark and Share

விரக்தி அடைந்த வெங்கடேஷ்!

நல்ல படங்களை எடுக்கும் இயக்குநர்கள் காலத்தைக் கடந்தும் மக்கள் நினைவில் நிற்பார்கள். மசாலாப்படங்களை எடுக்கும் இயக்குநர்களை மக்கள் மட்டுமல்ல சினிமாக்காரர்களே மதிக்க மாட்டார்கள்.

இதற்கு, மசாலாப்படங்களை எடுத்த இயக்குநர்களுக்கு கடந்த காலங்களில் நடந்த எத்தனையோ உதாரண சம்பவகளை சொல்ல முடியும். சமீபத்தில் அப்படியொரு அவமரியாதையை சந்தித்தவர் ஏ.வெங்கடேஷ். மகா பிரபு தொடங்கி சமீபத்தில் ரிலீசான கில்லாடி, சண்டமாருதம் படங்கள் வரை ஏ.வெங்கடேஷ் தொடர்ந்து மசாலாப்படங்களை மட்டுமே இயக்கி உள்ளார்.

ஒரு சில படங்கள் தவிர தொடர்ந்து ப்ளாப் படங்களைக் கொடுத்ததால் மார்க்கெட் இழந்த இயக்குநர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டார். இதை உணராமல் ஒரு மசாலாப்படத்துக்கான கதையை ரெடி பண்ணிக் கொண்டு முன்னணி ஹீரோக்களை சந்திக்க முயற்சி செய்திருக்கிறார். யாருமே அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கவில்லையாம்.

ரொம்ப நல்லவன்டா நீ பிரஸ்மீட்டில் இந்த சம்பத்தைப் பற்றி குறிப்பிட்டு வருத்தப்பட்டார். அதுமட்டுமல்ல, ரொம்ப நல்லவன்டா நீ படத்தில் நடித்த ரேகா, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கனல் கண்ணன் போன்றோர் படத்தின் புரமோஷனுக்கு அழைத்தும் வர மறுத்துவிட்டனராம்.

மார்க்கெட் இல்லை என்றால் மரியாதையும் இருக்காது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததும் விரக்தியடைந்துவிட்டார் வெங்கடேஷ்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions