மிர்ச்சி செந்திலின் பயத்தை போக்கிய ஏ.வெங்கடேஷ்!

Bookmark and Share

மிர்ச்சி செந்திலின் பயத்தை போக்கிய ஏ.வெங்கடேஷ்!

ரேடியோ ஜாக்கியாக இருந்து சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். அதையடுத்து தவமாய் தவமிருந்து, எவனோ ஒருவன், செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், பப்பாளி, வெண்ணிலா வீடு என பல படங்களில் நடித்தவர் தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள ரொம்ப நல்லவன்டா நீ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில்,

இந்த படம் எனது 8வது படம். சரத்குமார், விஜய்ன்னு பெரிய ஹீரோக்களை வைத்தெல்லாம் படம் பண்ணிய வெங்கடேஷ் சார் என்னை அழைத்ததும் அதிக நம்பிக்கையுடன் அவரை தேடிச்சென்றேன்.

அப்போது என்னிடம் கதை சொல்லி உடனே ஓகே பண்ணி விட்டார்.  அதோடு, என்னிடம் இது காட்சி, இதில் இப்படி இப்படி நடிக்க வேண்டும் என்று அவர் நடித்துக்காட்டியே வேலை வாங்கினார்.

அதனால் அவரிடம் கற்றதை வைத்து இதுவரை நடித்த படங்களை விட இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்று கூறும் மிர்ச்சி செந்தில், இந்த படத்தில் நான் நடித்தபோது, என்னிடமும் அஜீத், விஜய்யிடம் பேசுறது போன்றுதான் பேசிப்பழகினார் வெங்கடேஷ் சார்.

அதனால் பெரிய டைரக்டராச்சே அவரிடம் எப்படி வேலை செய்யப்போகிறோம் என்று பயந்து வந்த எனக்கு ஆச்சர்யமாகவும், அவரது மரியாதைக்குரிய நடிகனாக பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்தது.

அதனால் ரொம்ப நல்லவன்டா படத்தில், ரொம்ப நல்ல நடிகன் இவன் என்று சொல்லும் அளவுக்கு எனது நடிப்பும் வந்திருக்கிறது என்கிறார். 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions