பாடல் எழுத கஷ்டப்பட்ட வெங்கடேஷ்!

Bookmark and Share

பாடல் எழுத கஷ்டப்பட்ட வெங்கடேஷ்!

சமீபகாலமாக டைரக்டர்கள் மட்டுமின்றி கமல், தனுஷ் உள்ளிட்ட சில ஹீரோக்களும் பாடல்கள் எழுதத் தொடங்கி விட்டனர். ஆரஞ்சு மிட்டாய் படத்தில் விஜயசேதுபதி வசனமே எழுதியிருக்கிறார்.

அந்த அளவுக்கு எழுத்து துறையில் நடிகர்களும் நுழைந்து வருகின்றனர்.இந்த நிலையில், டைரக்டர் ஏ.வெங்கடேசுக்கும் நீண்டகாலமாக தானும் ஒரு படத்தில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம்.

அதனால், ரொம்ப நல்லவன்டா நீ என்ற பெயரில் தான் இயக்கியுள்ள படத்தில் ஒரு டூயட் பாடலை எழுதினாராம். அதாவது, ரஜினி பிடிக்கும் கமல் பிடிக்கும், அதை விட உன்னை ரொம்ப பிடிக்கும்.

அஜீத் பிடிக்கும், விஜய் பிடிக்கும் அதைவிட உன்னை ரொம்பப் பிடிக்கும் என்று முதல் நான்கு வரிகளை எழுதியவருக்கு மேற்கொண்டு எழுத முடியவில்லையாம். அதனால் அந்த பாடலை வேறு பாடலாசிரியரை வைத்து எழுதினாராம்.

ஆக, பாடல் எழுதுவதும் சாதாரணமான விசயமல்ல, அதிலும் கஷ்டம் இருக்கிறது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டாராம் வெங்கடேஷ்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions