பழம்பெரும் ஔிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் காலமானார்

Bookmark and Share

பழம்பெரும் ஔிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் காலமானார்

கேரள மாநிலம், கோழிக்கோடில் 1928 ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி பிறந்தவர் அலாய்சிஸ் வின்சென்ட். சண்டி ராணி என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஔிப்பதிவாளர் அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் ஔிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார் வின்சென்ட். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.

தமிழில் ஔிப்பதிவு செய்த படங்கள்தமிழில், அமர தீபம் என்ற படத்தின் மூலம் ஔிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து யார் பையன், உத்தமபுத்திரன், கல்யாணப்பரிசு, விடி வௌ்ளி, எல்லோரும் இந்நாட்டு மன்னர், மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஓர் ஆலயம், தேன் நிலவு, புனர் ஜென்மம், போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை, எங்க வீட்டு பிள்ளை, எங்களுக்கும் காலம் வரும், துணைவன், துலாபரம், கௌரவம், இரு வீடுகள், இரு துருவம், சவாலே சமாளி, வசந்தமாளிகை, திருமாங்கல்யம், அக்கரைபச்சை, அவன் ஒரு சரித்திரம், ரோஜாவின் ராஜா, இளமை கோலம், ஆனந்த கும்மி மற்றும் ஞானப்பறவை  போன்ற படங்களுக்கு ஔிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஔிப்பதிவாளர் வின்சென்ட் தான். தமிழில் இயக்கிய படங்கள். ஔிப்பதிவாளராக மட்டுமல்லாமல், நாம் பிறந்த மண், திருமாங்கல்யம், இரு வீடுகள், துலாபரம், எங்களுக்கும் காலம் வரும் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

கவுரவ உறுப்பினர்2003-ம் ஆண்டு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இவருக்கு கவுரவ உறுப்பினர் பதவி அளித்தது. மகன்களும் ஔிப்பதிவாளர்கள். வின்சென்ட்டின் மகன்களான, ஜெயனன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட் ஆகியோரும் ஒளிப்பதிவாளர்களாக உள்ளனர்.வின்சென்ட்டின் உடல், சென்னை சேத்துபட்டில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(பிப்., 26ம் தேதி) அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது.


Post your comment

Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions