ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள சிம்புவின் AAA போஸ்டர்!

Bookmark and Share

ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள சிம்புவின் AAA போஸ்டர்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு வேடம் மதுர மைக்கேல் எனும் தர லோக்கல் ரௌடி வேடம். இந்த ரௌடி சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே சொன்னதுபோல் இன்று மாலை இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

டைட்டில்படி பார்த்தால் இந்த சிம்பு அசராதவனாக இருப்பார் என்பது போஸ்டரை பார்க்கும்போதே புலப்படுகிறது. மேலும் அசராதவனை அறிமுகப்படுத்தியது போல அடுத்தடுத்து அடங்காதவனையும் அன்பானவனையும் அறிமுகப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions