லல்லு பிரசாத் நடிக்கும் ஆப்ர கடாப் ரா

Bookmark and Share

லல்லு பிரசாத் நடிக்கும் ஆப்ர கடாப் ரா

பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் நடிக்கும் பீகாரி மொழி படம் என்று நினைத்து விட வேண்டாம். லல்லு பிரசாத் என்ற புதுமுகம் நடிக்கும் தமிழ் படம்தான் ஆப்ர கடாப் ரா.

இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்று இப்போதைக்கு சொல்ல மாட்டார்களாம். ஆனால் டைட்டிலுக்கும் படத்துக்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கிறதாம்.

சரி படம் சொல்ல வருவது என்ன என்றால்...  "மூட நம்பிக்கை ஒரு மனிதனின் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடி அவன் முன்னேற்றத்தை தடுக்கிறது என்பதை காதல் காமெடி கலந்து சொல்கிற படம்.

எல்லா பிரச்சினைகளிலும் மனிதர்கள் இரண்டு வித நிலைப்பாடுகளை எடுத்து அதில் எது சரி என்று தெரியாமல் கடைசி வரை தவித்துக் கொண்டிருப்பார்கள். அந்த தவிப்பை பற்றியும் படம் பேசுகிறது.

புதுமையான திரைக்கதைதான் படத்தின் பலம்" என்கிறார் இயக்குனர் ஜி.பெட்ரிக். ப்ரீத்தி சித்ரா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார், மாரி ஷக்தி இசை அமைக்கிறார். நல்ல வேளை பேய் படமாக இல்லை என்று ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions