தெலுங்கில் வில்லனாகும் ஆதி

Bookmark and Share

தெலுங்கில் வில்லனாகும் ஆதி

பாகுபலி  படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு தெலுங்குத் திரைப்பட இயக்குனர்கள் வில்லன்களைத் தேடி தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.  

பாகுபலி  படத்தில்  கட்டப்பா  என்ற குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தாலும், கடைசியில் அவர்தான் பிரபாஸைக் கொன்றவர் என்பதால் அவரை வில்லனாகவே தெலுங்கு ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ் நடிகர்களுக்கு தெலுங்குத் திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்துவிட்டதால், தமிழில் முன்னணியில் உள்ளவர்களை தெலுங்கில் அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அடுத்து  மிருகம்  படத்தில் நாயகனாக அறிமுகமாகி  ஈரம், அரவான், யாகாவாராயினும் நாகாக்க  ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ள ஆதியும் தெலுங்கில் வில்லனாக நடிக்கப் போகிறாராம். அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் ஆதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்கிறார்கள். இந்தப் படத்தை பிரபல இயக்குனரான பொயப்பட்டி சீனு இயக்க உள்ளார்.

 தெலுங்கில் பிரபல இயக்குனரான ரவிராஜா பினிசெட்டியின் மகன்தான் ஆதி. தெலுங்கில் 2006ம் ஆண்டு வெளிவந்த  ஒக வி சித்ரம்  என்ற படத்தில் பிரதீப் பினிசெட்டி என்ற பெயரில் நாயகனாக அறிமுகமானவர். அதன் பின்  குண்டெல்லோ கோதாரி  என்ற ஒரே ஒரு தெலுங்குப் படத்தில்தான் நாயகனாக நடித்திருக்கிறார். இப்போது அங்கு வில்லனாக மறுபிரவேசம் எடுக்க உள்ளார்.


Post your comment





Related News
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் தம்பி இறந்துட்டார், கண்ணீரில் தத்தளிக்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்
அஜித் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் மெகா ஹிட் நடிகரின் மகன் - புலம்பும் படக்குழு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions