ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!

உலகில் இதுவரை நடைபெற்ற எந்த போராட்டங்களுடனும் ஒப்பிட முடியாத போராட்டம் ஜல்லிகட்டு தடை நீக்க கோரி நடைபெற்ற போராட்டம். தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் தமிழர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு ஜல்லிகட்டு ஆதரவுபோராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

ஜல்லிகட்டு தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம் சம்பந்தமான விழா என்றாலும் தமிழர், வட இந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் என பன்முக கலாச்சார சங்கமமாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த குரலில் ஆதரித்த 'ஜல்லிகட்டு' போராட்டம் முதல் நாளிலேயே விஸ்வரூபமெடுத்தது.

குடும்பங்கள் ஆதாரித்து கொண்டாடிய ஒரே போராட்டம் ஜல்லிகட்டு போராட்டம் என்ற வரலாறு படைத்தது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாணவர்-இளைஞர் தன் எழுச்சி போராட்டம். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் 'சுதந்திரம் எமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்' என்ற கோஷத்தை பால கங்காதர திலகர் முதன் முறை முழங்கியது சென்னை மெரினா கடற்கரையில்தான்.

அப்பெருமை மிகு மெரினா கடற்கரையில் வரலாறு படைத்த 'மக்கள் போராட்டம்' மகிழ்ச்சியுடன் கொண்டாடி கலைந்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்காமல் ரத்த களறியோடு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம்.

எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்த ஈழ போராட்டம் நிர்மூலமானதற்கு காரணம்அவர்களுடன் உடனிருந்து பயணித்த கருணாமூர்த்தி இலங்கை அரசின் கைக்கூலியானதால். அதே போன்ற நிகழ்வுதான் ஜல்லிகட்டு ஆதரவுப் போராட்டத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

ஜல்லிகட்டுக்கு ஆதராவாக கூலி வாங்கி கொண்டு பாடலுக்கு இசையமைத்தவர் இந்த ஆதி. பாடல் பிரபலமானதால் ஆதியும் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டு தீயாகப் பரவியபோது பல மேடைகளில் இவருக்கு இடம் கிடைத்தது. தொலைக்காட்சி ஊடகங்களும் உண்மை நிலை தெரியாமல் ஆதியை முன்னிலைப்படுத்தின. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக மக்கள் தன் எழுச்சியை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது.

மத்திய அரசு, மாநில அரசுக்கு போராட்டத்தை வைத்து சில நெருக்கடிகளைக் கொடுத்தது. இந்த போராட்டத்தினால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதையும், எதிர்வரும் காலங்களில் தடை செய்ய பட கூடிய கருமேகங்கள் உருவாகி வருவதையும் உணர்ந்தன பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள்.

போராட்டத்தில் வெற்றி பெற்றதை எழுச்சியுடன் கொண்டாட விட்டால் அடுத்த மாதமே வேறு ஒரு கோரிக்கையை வைத்து போராட்டத்தைத் தொடங்குவார்கள் என்பதை உளவுத் துறை அதிகார வர்க்கத்துக்கு அறிவுரையாகச் சொன்னது.

ஜல்லிகட்டு போராட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்ட அரசியல் அமைப்புகள் கலந்திருந்தாலும் போராட்டம் தொய்வின்றி, குழப்பமின்றி இரவு பகலும் தொடர்ந்தது. போராட்டத்தில் குழப்பத்தை, மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க திட்டமிடப்பட்டது. இப்போராட்டத்தில் முதல் நாளிலிருந்து பங்கெடுத்து வரும் இயக்குநர்கள் வ.கெளதமன், சமுத்திரகனி, அமீர், லாரன்ஸ் இவர்களை நெருங்க முடியவில்லை.

ஜல்லிகட்டு பாடல் மூலம் பிரபலம், படத் தயாரிப்புக்கு பணத்தேவை என்ற நிலையில் இருந்த ஆதியை பகடைக்காயாக பயன்படுத்த திட்டமிட்டன அரசும், பன்னாட்டு வர்த்தக நிறுனங்களும். குறிப்பாக கோக், பெப்சி கம்பெனிகள். இவர்களால்தான் கையகப்படுத்தபட்டார் ஆதி என்கிறார்கள் ஜல்லிகட்டு போராட்ட ஆதரவாளர்கள்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions