மீண்டும் ஆதியுடன் ஜோடி சேரும் நிக்கி கல்ராணி!

Bookmark and Share

மீண்டும் ஆதியுடன் ஜோடி சேரும் நிக்கி கல்ராணி!

‘மிருகம்’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் ஆதி. இப்படத்தையடுத்து ‘ஈரம்’, ‘அய்யனார்’, ‘அரவாண்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

கடந்த வருடம் இவருடைய நடிப்பில் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படம் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருத்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஆதி-நிக்கி கல்ராணி ஜோடி பற்றி அதிகம் பேசப்பட்டது.

தற்போது மீண்டும் புதிய படம் மூலம் ஆதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நிக்கி கல்ராணி. இந்த புதிய படத்தை அறிமுக இயக்குனர் சரவணன் இயக்குகிறார். டில்லிபாபு அதிக பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர்.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions