ஆடுகளம் நரேனுக்கு அப்பா வேடம் போரடித்து விட்டதாம்!

Bookmark and Share

ஆடுகளம் நரேனுக்கு அப்பா வேடம் போரடித்து விட்டதாம்!

சினிமாவில் டைரக்டராக வேண்டும் என்று வந்தவர்தான் ஆடுகளம் நரேன். ஆனால் நடிப்புதான் அவருக்கு கைகொடுத்தது. அதனால் முழுநேர நடிகராகி விட்ட அவர், படம் இயக்கும் முயற்சிகளை தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விட்டார்.

அதேசமயம் எதிர்காலத்தில் சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் டைரக்டர் அவதாரமும் எடுப்பாராம். இந்த நிலையில், சமீபகாலமாக பல படங்களில் அப்பா வேடங்களில் நடித்து பிரதான அப்பா நடிகராகி விட்ட ஆடுகளம் நரேனுக்கு தொடர்ந்து அப்பாவாக நடித்து போராடித்து விட்டதாம்.

அதனால் தற்போது வித்தியாசமான கேரக்டர்கள் பக்கம் கவனத்தை திருப்பி வருகிறார். அதன்காரணமாக, சில படங்களில் சினிமாப்பட தயாரிப்பாளராக நடித்துள்ள அவர், தியேட்டர் உரிமையாளர் என மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

இதில் அவர் ஜிகர்தண்டா படத்தில் நடித்த தயாரிப்பாளர் வேடம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியதைப் பார்த்துதான் கள்ளப்படம் என்ற படத்தில் அவரை மீண்டும் தயாரிப்பாளர் வேடத்தில் நடிக்க வத்துள்ளார்களாம்.

அதனால் அந்த வேடத்தில் ஒரு தயாரிப்பாளருக்கு சினிமாவில் இருக்கிற நெருக்கடி, பிரச்சினைகள் என அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடித்துள்ளாராம் ஆடுகளம் நரேன்.

இதன்பிறகு இன்னும் வித்தியாசமான கேரக்டர்கள் பக்கம் செல்ல ஆசைப்படும் அவர், யாராவது அப்பா வேடம் என்று கேட்டுசென்றாலே அதே படத்தில் வேறு ஏதாவது நல்ல கேரக்டர் இருந்தால் கொடுங்களேன் என்றும் கேட்டு வாங்குகிறாராம்.


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது
சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions