விக்னேஷ் சிவனின் அடுத்த 'ஆர்வக் கோளாறு' பாடல்...

Bookmark and Share

விக்னேஷ் சிவனின் அடுத்த 'ஆர்வக் கோளாறு' பாடல்...

'போடா போடி' படத்தை இயக்கியவரும், தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'நானும் ரௌடிதான்' படத்தின் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபத்தில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் அறிமுகப் பாடலான 'அதாரு உதாரு...' பாடலை எழுதியிருந்தார்.

இந்தப் பாடலுக்கு அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பாப்புலாரிட்டியைப் பயன்படுத்திக் கொண்டு அப்படியே அவர் எழுதிய 'ஆர்வக் கோளாறு' சுருக்கமாக 'ஆகோ' படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை நாளை மறுநாள் காதலர் தினத்தன்று வெளியிட இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள 'எனக்கென யாருமில்லையே...' என்ற பாடலைத்தான் அன்றைய தினம் வெளியிட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் மற்றும் படக் குழுவினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

'ஆகோ' படத்தை ஷியாம் குமார் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கீதன் பிரிட்டோ, துலிகா குப்தா, அர்ஜுனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிருத் இதுவரை தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் படங்களுக்கும், பெரிய பேனர் படங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து இசையைமத்து வந்தார்.

முதன் முறையாக புதியவர்கள் இணையும் ஒரு படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முதல் பார்வையைக் கூட அனிருத் இடம் பெற்ற புகைப்படத்தை வைத்துத்தான் வெளியிட்டார்கள்.

அஜித் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இனி, மேலாவது படத்தின் நாயகன், நாயகியருக்கும் முக்கியத்துவம் தருவார்களா என்று பார்ப்போம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions