எனக்கென யாருமில்லையே...10 லட்சம் ஹிட்ஸ்...

Bookmark and Share

எனக்கென யாருமில்லையே...10 லட்சம் ஹிட்ஸ்...

படத்தில் நடித்துள்ள நடிகர்களைக் கூட இதுவரை சரியாக விளம்பரப்படுத்தவில்லை. ஆனால், படத்தின்  இசையமைப்பாளருக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்தப்படும் படம் 'ஆக்கோ',  அதாவது 'ஆர்வக் கோளாறு'. அப்படி விளம்பரப்படுத்தப்படும் இசையமைப்பாளர் அனிருத்.

தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களைத் தவிர ஒரு சிறிய படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை. அதற்காக அவர் பாடலில் சிறிய ஹிட்டுடன் நிறுத்திக் கொள்ளவில்லை.

மற்ற படங்களைப் போலவே இந்தப் படத்திற்காகவும் ஹிட்டான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.  அதில் 'எனக்கென யாருமில்லையே....' என்ற ஒரு காதல் பாடலை காதலர் தினத்தன்று வெளியிட்டார்கள்.

'அதாரு உதாரு...' புகழ் விக்னேஷ் சிவன் எழுதிய இந்தப் பாடலை அனிருத்தே அவருடைய ஏக்கமான குரலில் காதல் ஏக்கத்தை அதிகமாக வெளிப்படுத்தும் அளவிற்குப் பாடியிருக்கிறார்.

வழக்கம் போல இந்தப் பாடலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிட்டது. சிங்கிள் டிராக்காக வெளியிடப்பட்ட இந்தப் பாடல் யூடியூபில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ்களை அள்ளியிருக்கிறது. ஷியாம் குமார் இயக்கத்தில் கீதன் பிரிட்டோ, துலிகா குப்தா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் இந்தப் படம் திரைக்கு வரலாம். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions