அமீர் படத்தை எதிர்பார்க்கும் மிரித்திகா!

Bookmark and Share

அமீர் படத்தை எதிர்பார்க்கும் மிரித்திகா!

சசி இயக்கத்தில் பரத் நாயகனாக நடித்த படம் 555. இந்த படத்துக்காக பல மாதங்களாக கடின உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் கெட்டப்பில் நடித்தார் பரத். ஆனபோதும் அவரது உழைப்புகேற்ற பலனை அந்த படம் கொடுக்கவில்லை.

இருப்பினும், அந்த சிக்ஸ்பேக் காரணமாக அடுத்து இந்தியில் ஜாக்பாட் என்ற படத்தில் சன்னிலியோனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் பரத்.

மேலும், 555 படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்த மிரித்திகாவுக்கு அதையடுத்து ஓரிரு படங்கள் கிடைப்பதற்கான சூழலும் இருந்தபோதும், அந்த படத்தின் தோல்வி காரணமாக அவரை யாரும் கமிட் பண்ணவில்லை.

அதனால் அதையடுத்து வேற்று மொழிப்படங்களில் நடித்து வந்த அவர், தற்போது தமிழில் அமீர் நடித்து வரும் பேரன்பு கொண்ட பெரியோர்களே -என்ற அரசியல் காமெடி படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் சிங்கிள் ஹீரோயினாக நடிக்கும் மிரித்திகா யுத்தம் செய் படத்தில் அமீர் நடனமாடிய கன்னித்தீவு பொண்ணா -என்ற பாடலைப்போன்று ஒரு பாடலுக்கு அவருடன் செம கலக்கலாக நடனமாடியிருக்கிறாராம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தமிழில் நல்லதொரு கமர்சியல் நடிகைக்கான அங்கீகாரம் தனக்கு கிடைத்து விடும் என்று கூறிவருகிறார் மிரித்திகா.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?
பாகுபலியை மிஞ்சிய அமீர்கானுக்கு அடுத்த பிரம்மாண்ட படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions