சல்மான் கானின் கருத்து துரதிர்ஷ்டவசமானது: அமீர் கான் பேட்டி

Bookmark and Share

சல்மான் கானின் கருத்து துரதிர்ஷ்டவசமானது: அமீர் கான் பேட்டி

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் இந்தி நடிகர் சல்மான் கான், தான் மல்யுத்த வீரராக நடித்துள்ள சுல்தான் படம் குறித்து கடந்த வாரம் பேட்டி அளித்தார்.

அதில், சுல்தான் படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாக கூறிய சல்மான் கான், தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், பாலியல் பலாத்காரத்துக்குள்ளான ஒரு பெண் நிலைமையில் இருக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.

சல்மானின் கான் இந்த பேச்சு பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விளக்கம் அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மராட்டிய மகளிர் ஆணயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், தனது கருத்துக்கு சல்மான் கான் இதுவரை மன்னிப்புகோரவில்லை.  சல்மான் கானின் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பாலிவுட் பிரபலங்கள் ஒருசிலர் கருத்து கூறிய நிலையில், பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான அமீர் கான் இந்த விஷயத்தில் மவுனம் காத்துவந்தார். 

மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமீர் கான் “ அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. ஊடக தகவல்களை வைத்து சொல்வதென்றால், சல்மான் கான் கூறியது துரதிருஷ்டவசமானது, அறிவுப்பூர்வமற்றது என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions