வியத்தகு இந்தியா பொறுப்பில் இருந்து நீக்கிய அரசின் முடிவை மதிக்கிறேன்: அமீர்கான் பேட்டி

Bookmark and Share

வியத்தகு இந்தியா பொறுப்பில் இருந்து நீக்கிய அரசின் முடிவை மதிக்கிறேன்: அமீர்கான் பேட்டி

நாட்டின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை கடல் கடந்து பிற நாடுகளுக்கும் பறைசாற்றும் பொருட்டு, ‘இன்கிரடிபிள் இந்தியா’ (வியத்தகு இந்தியா) என்ற பிரசார யுக்தி மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் கையாளப்பட்டு வந்தது. இதன் விளம்பர தூதராக இந்தி நடிகர் அமீர்கான் திகழ்ந்தார். 

இந்நிலையில், திடீரென இந்த பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடக்கத்தில் இத்தகவலை மத்திய சுற்றுலா அமைச்சகம் மறுத்தாலும், பின்னர் அதற்கான காரணத்தை தெரிவித்து, அமீர்கான் நீக்கம் செய்யப்பட்டதை உறுதிபடுத்தியது.

பரபரப்பான இந்த தருணத்தில், இன்கிரடிபிள் இந்தியா பிரசாரத்தில் இருந்து தான் விடுவிக்கப்பட்டது குறித்து, அமீர்கான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 

எந்தவொரு பிரசாரத்துக்கும் விளம்பர தூதரை நியமிக்க வேண்டுமா? அப்படியே நியமித்தாலும், அதற்கு யாரை தேர்ந்தெடுக்கலாம்? என்று முடிவு எடுப்பது அரசின் தனிப்பட்ட உரிமை ஆகும்.

இன்கிரடிபிள் இந்தியா சேவையில் இருந்து என்னை நீக்கம் செய்த அரசின் முடிவை நான் மதிக்கிறேன். நாட்டுக்கு தேவையான சிறப்பான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். 

இன்கிரடிபிள் இந்தியா பிரசார தூதராக 10 ஆண்டுகள் சேவை ஆற்றியிருக்கிறேன். இதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன். நான் பிரசார தூதராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்தியா எப்போதும் வியத்தகு நாடாகவே காட்சியளிக்கும். 

இவ்வாறு அதில் அமீர்கான் தெரிவித்துள்ளார். 

அமீர்கானுக்குப்பதிலாக அந்த பொறுப்பில் நடிகர் அமிதாப்பச்சன் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions