சைனிக் பள்ளி மாணவர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டேன்: அமீர்கான் புரிப்பு

Bookmark and Share

சைனிக் பள்ளி மாணவர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டேன்: அமீர்கான் புரிப்பு

நாட்டின் முதலாவது சைனிக் பள்ளிக்கூடம் சதாராவில் செயல்பட்டு வருகிறது. ராணுவத்தில் மாணவர்களை ஈடுபடுத்தும் உன்னத நோக்கத்துடன் இந்த பள்ளிக்கூடம், முன்னாள் ராணுவ மந்திரி கே.வி.கிருஷ்ண மேனனால் 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த சைனிக் பள்ளிக்கூடத்துக்கு இந்தி நடிகர் அமீர்கான் வருகை புரிந்தார். பள்ளிக்கூட கலையரங்கில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, ‘‘உங்களுடைய ஒழுக்கநெறி மற்றும் தேசப்பற்றை பார்த்து நான் வெகுவாக ஈர்க்கப்பட்டேன்’’ என்று அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும், மராட்டியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்றும், முடிந்தவரை தண்ணீரை சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் அவர் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இது தவிர, கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் உடனான தாக்குதலில், வீரமரணம் அடைந்த 37 வயது கர்னல் சந்தோஷ் மகாதிக்கின் தியாக உணர்வையும், தனது பேச்சின்போது அமீர்கான் நினைவுகூர்ந்தார்.

இதைத்தொடர்ந்து, சதாரா நகரில் நடைபெற்ற நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அமீர்கான் பேசினார்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions