கிராமப்புற நீர் திட்டத்துக்கு அமீர்கான் ரூ.11 லட்சம் நிதியுதவி

Bookmark and Share

கிராமப்புற நீர் திட்டத்துக்கு அமீர்கான் ரூ.11 லட்சம் நிதியுதவி

மராட்டிய மாநிலத்தில் வறட்சி மற்றும் பருவம் தவறிய மழையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் புகழ்பெற்ற நடிகர் நானா பதேக்கர் மற்றும் மராத்தி நடிகர் மஹாரந்த் அனஸ்புரே ஆகியோர் வறட்சியால் கணவரை இழந்த 120 விதவைகளுக்கு தலா ரூ. 15 ஆயிரம் என மொத்தம் ரூ.24 லட்சம் நிதி உதவி வழங்கினர். 

இந்தநிலையில் நடிகர் அமீர்கான் வறட்சியில் இருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்காக ரூ. 11 லட்சத்தை முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் வழங்கினார். கிராமப்புற நீர்ப்பாதுகாப்பு திட்டத்திற்காக இந்த தொகையை பயன்படுத்த அமீர்கான் வழங்கி உள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் கூறியதாவது, 

“கிராமப்புறங்களில் வறட்சியை ஒழிக்கும் திட்டத்திற்காக அமீர்கான் ஆதரவு அளித்து இருப்பதை வரவேற்கிறேன். அமீர்கானின் இந்த செயலால் கிராமப்புற நீர் பாதுகாப்பு திட்டத்திற்கு உதவி செய்ய மேலும் பலர் முன் வருவார்கள்” என்றார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions