நான் ஒரு இந்தியனாக பிரதிபலிக்கிறேன். இஸ்லாமியராக அல்ல- அமீர்கான் குரல்!

Bookmark and Share

நான் ஒரு இந்தியனாக பிரதிபலிக்கிறேன். இஸ்லாமியராக அல்ல- அமீர்கான் குரல்!

நாட்டில் சகிப்புத் தன்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொருட்டு தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளித்தனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பலரும் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்து வந்தனர். 

அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் அமீர்கான் பேசியதாவது:-

”எல்லா சமூகத்தினருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான விஷயம். பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வலிமையான நிலைப்பாடும், வலிமையான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும்.

ஒரு குடிமகனாக என்னால் மறுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பங்கள் என்னை எச்சரிக்கை படுத்தியிருக்கிறது என்பதை ஒருகுடிமகனாக என்னால் மறுக்க முடியாது.

என் மனைவி கிரண் முதல் முறையாக ’நாம் வெளிநாட்டிற்கு சென்றுவிடலாமா?’ என்று கேட்டுள்ளார்.அவர் தன்னுடைய குழந்தைக்காகவும், நம்மைச் சுற்றி என்ன மாதிரியான சூழ்நிலை உருவாகும் என்றும் பயப்படுகிறார். என்னுடைய மனைவி தினமும் செய்திதாளை படிக்கவே பயப்படுகிறார். நாட்டில் அமைதியின்மையும், விரக்தியும் அதிகரித்து வருகிறது. 

படைப்பாளிகள் தாங்கள் எந்த விவகாரம் முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்களோ, அதற்காக அவர்களது அதிருப்தியை விருதினை திருப்பி அளிப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம். தங்கள் விருப்பப்படி வன்முறை சம்பங்களுக்கு எதிராக போராட்டங்களை கையிலெடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு.

இந்த விவகாரத்தில் என்னை மதத்துடன் தொடர்பு படுத்த வேண்டாம். ஒரு இந்தியனாக பிரதிபலிக்கிறேன். இஸ்லாமியராக அல்ல என கூறினார்.” இவ்வாறு அவர் பேசினார்.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions