
கோலிவுட் ஹீரோக்களில் கமல், விக்ரம், சூர்யா போன்ற ஹீரோக்கள் தாங்கள் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடல் எடையை ஏற்றுவது, குறைப்பது என ரிஸ்க் எடுக்கின்றனர்.
பாலிவுட்டிலும் ஆமிர்கான் இதுபோன்ற பயிற்சியில் ஈடுபடுகின்றார். பிகே படத்தில் நடித்த ஆமிர்கான் அடுத்து ‘தங்கால்’ படத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக தற்போது 95 கிலோ உடல் எடை போட்டிருக்கிறார்.
இந்த எடை போதும் என்றாலும் இயக்குனர் கேட்கும் பட்சத்தில் கூடுதல் வெயிட் போடவும் சம்மதித்திருக்கிறார்.இதுபற்றி ஆமிர்கான் கூறும்போது, ‘தற்போது 95 கிலோ எடை போட்டிருக்கிறேன்.
என்னுடைய சுவாசமே தற்போது பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஷூ லேஸ் போடுவதற்காக குனித்தால் எனது வயிறு இடையூறாக குறுக்கே நிற்கிறது. 20 நொடிகளுக்கு பிறகு நீண்ட மூச்சுவிட வேண்டியிருக்கிறது.
உடல் எடையை அடிக்கடி ஏற்றி இறக்குவதால் எனக்கு பாதிப்பு வருமோ என என் அம்மாவும், மனைவியும் கவலைப்படுகிறார்கள். எனக்கும் அந்த கவலை இருக்கிறது. தற்போது போட்டிருக்கும் உடல் எடையை படம் முடிந்தபிறகே குறைத்து நார்மல் தோற்றத்துக்கு வருவேன்’ என்றார்.
Post your comment