சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்

Bookmark and Share

சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்

இந்தி திரையுலகில் அமீர்கான் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் கொண்ட நடிகர். இவர், இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவர்ந்தவர்.

இந்நிலையில், நடிகர் அமீர்கான் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அவரது முதல் படமான  ‘கயாமாத் சே கயாமத் டக்’ திரைப்படத்தை மீண்டும் திரையிடும் நிகழ்ச்சி படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அமீர்கான், நிகழ்ச்சிக்கு டாக்ஸி ஓட்டுநர்களையும் அழைத்திருந்தார்.

அவரது முதல் படத்தின் வெற்றிக்கு டாக்ஸி ஓட்டுநர்களின் பங்கு முக்கியமானது என்பதை நினைவு கூர்ந்தே அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுடன் உரையாடிய அமீர்கான், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அமீர்கானின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்துள்ளார். 


Post your comment





Related News
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?
பாகுபலியை மிஞ்சிய அமீர்கானுக்கு அடுத்த பிரம்மாண்ட படம்!
பாகுபலி 2 பட சாதனை பற்றி முதன்முதலாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர்
சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions