அமீர்கானும் - ஜாக்கி சானும் இணைந்து நடிக்கிறார்கள்!

Bookmark and Share

அமீர்கானும் - ஜாக்கி சானும் இணைந்து நடிக்கிறார்கள்!

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வருவதையொட்டி இருநாட்டின் நல்லுறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இரு நாட்டு அரசும் இணைந்து இரு நாட்டு கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் படங்களை தயாரிக்க உள்ளது.

சீன திரைப்பட கட்டுப்பாட்டுக் கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளளது. 


முதல் கட்டமாக சீன தற்காப்பு கலையான குங்பூவையும், இந்திய பாரம்பரிய அடையாளமான யோகாவையும் இணைத்து குங்பூ யோகா என்ற படத்தை தயாரிக்க இருக்கிறது.

இதில் ஜாக்கிசானும், அமீர்கானும் நடிக்க உள்ளனர். இதன் பிறகு சீன மன்னர் டாங் மன்னாரட் ஆட்சியின்போது புத்த துறவியான சுவான் ஷாங் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

அவரது அந்த பயணத்தை அடிப்படையாக வைத்து அடுத்த படம் தயாரிக்க இருக்கிறது. இதில் புத்த துறவியாக நடிப்பவரும் ஜாக்கிசான் என்று கூறப்படுகிறது. அவரை வரவேற்று வசதி செய்து தரும் இந்திய மன்னராக அமிதாப் நடிக்கலாம் என்று தெரிகிறது.


அடுத்து டா நவோ டியான் ஸ என்ற படம் தயாரிக்கப்படுகிறது. இது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பாரம்பரிய உறவும் அதை மற்றவர்கள் எப்படி குழப்பமாக்கினார்கள் என்பதை பற்றியும் சொல்லப்போகும் படம். இதனை பிரபல சீன நடிகர் வாங் பவோகியாங் இயக்க இருக்கிறார்.


இந்தத் திரைப்படங்கள் மூலம் இந்திய திரைப்படங்கள் சீனாவுக்குள்ளும், மார்க்கெட் செய்யமுடியும், இந்திய படங்களால் சீனாவுக்கும் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று என்றாலும் தற்போதய மோடி வருகையால் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions