ஜாக்கி சான் படத்தில் நடிக்கவில்லை - அமீர்கான்!

Bookmark and Share

ஜாக்கி சான் படத்தில் நடிக்கவில்லை - அமீர்கான்!

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு பிறகு இருநாட்டின் நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக இந்திய-சீனா இணைந்து இருநாட்டு கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக படங்கள் தயாரிக்க உள்ளது.

அதில் முக்கியமான படம், சீன தற்காப்பு கலையான குங்பூவையும், இந்திய பாரம்பரிய அடையாளமான யோகாவையும் இணைத்து குங்பூ யோகா என்ற படம் உருவாக உள்ளது. இதில் அமீர்கானும், ஜாக்கி சானும் இணைந்து நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வந்தது. ஆனால் இப்போது இந்தப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று அமீர்கான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமீர்கான் கூறியுள்ளதாவது,

இந்திய-சீனா கூட்டு தயாரிப்பு படத்தில் ஜாக்கி சான் நடிப்பது உண்மை தான். ஆனால் நான் நடிக்கவில்லை. தற்போது நான் நடித்து வரும் டங்கல் படத்தி்ன கால்ஷீட் பிரச்னையால், ஜாக்கி சான் படத்தில் நடிக்க முடியவில்லை.

அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை வேறு எந்த படத்திலும் நான் நடிக்க முடியாது. ஜாக்கி சான் படத்தில் நடிக்க முடியாதது வருத்தம் தான். எதிர்காலத்தில் இதுபோன்று வேறு ஒரு கதைகள் அமையும் பட்சத்தில் நிச்சயமாக நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions